tamilnadu

img

மீண்டும் அதே பள்ளியில் பணி வழங்கக்கோரி மாணவர்கள் மனு

தலைமையாசிரியர் பணியிடை மாற்றம்

உதகை, நவ. 26- உதகை அருகே அரசு பள்ளியின் உதவி தலைமையா சிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை மீண்டும் அதே பள்ளியில் பணி  அமர்த்தக்கோரியும் அப்பள்ளி மாணவர்கள், பெற்றோர் கள் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.  நீலகிரி மாவட்டம், உதகை மெயின் பஜார் பகுதியில் நகராட்சி துவக்கப்பள்ளி  உள்ளது. இப்பள்ளியின் உதவி தலைமையாசிரியராக வனிதா என்பவர் பணியாற்றி வந் தார். இப்பள்ளியில் குறைவான மாணவர்கள் பயின்று வந்ததால் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந் நிலையில் அப்பள்ளயின் உதவி தலைமையாசிரியராக வனிதா பொறுப்பேற்றபின் அவரின் தனிப்பட்ட செயல் பாடு மற்றும் மாணவர்களின் திறன் மேம்பாடு பயிற்சியின் காரணமாக தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.  இந்நிலையில் உதவி தலைமையாசிரியர் வனிதா திடீரென புது மந்து பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு  இட  மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதையறிந்த இப்பள்ளி யின் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாண வர்கள் உள்ளிட்டோர், மீண்டும் உதவி தலைமையாசிரி யரை அதே பள்ளியில் பணி அமர்த்தக்கோரி திங்களன்று  மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவிடம் மனு அளித்தனர்.