tamilnadu

ஊராட்சிமன்றத் தலைவர் அவமதிப்பு கோவை மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கோவை, ஆக. 25-  ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்ட சம்பவம் தொடர் பாக கோவை மாவட்ட ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை மாவட்டம், சுல்தான் பேட்டை அருகே உள்ள ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவரான சரிதா என்பவர், தான் அருந்ததிய வகுப்பைச் சார்ந்ததால் தன்னை  ஊராட்சி மன்ற நாற்காலியில் அமரவிடா மலும், ஊரின் பெயர் பலகைகளில் தனது பெயரை எழுதவிடாமல் மிரட்டுவதாகவும் பாலசுப்பிரமணியம் என்பவர் மீது  புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என் பவர் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நெகமம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசா மணிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இச்சம் பவம் தொடர்பாக 3 வார காலத்திற்குள் உரிய விளக்கத்தை மனித உரிமை ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என  மாநில மனித உரிமை ஆணையம் உத்தர விட்டுள்ளது.