கோவை, செப்.11- கோவை மாநகராட்சியில் கொரோனா தொற்றுப் பரவா மல் தடுக்கும் பொருட்டு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவ னங்கள், உணவகங்கள், பேக்கரி, சலூன் கடைகள், மருந்து கடைகள், அனைத்து தனியார் மருத்துவமனைகள், மருத் துவ ஆய்வகங்கள், கிளீனிக்குகள், ஸ்கேன் சென்டர் ஆகிய இடங்களிலும் தினசரி மூன்று முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளரும், தனி அலுவல ருமான பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள் ளார். மேலும், கொரோனா தொற்று தொடர்பான சந்தேகங்க ளுக்கு கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளவும் 1077, 0422-2302323, 9750554321 அறிவுறுத்தியுள்ளார்.