tamilnadu

img

நூறு நாள் வேலை திட்ட அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தல்

தருமபுரி, பிப்.28- ஊத்தங்கரையில் நூறு நாள்  வேலை திட்ட அட்டை வைத்துள்ள  அனைவருக்கும் வேலை வழங்கு மாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர்  கோரிக்கை விடுத்துள்ளார்.  ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் வெள்ளியன்று ஊத்தங் கரை ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் உஷாராணி குமரேசன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்ன பூரணி, அசோகன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் சத்தியவாணி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட் டத்தில் ஒன்றியகுழு தலைவர் உஷா ராணி குமரேசன் பேசியதாவது, ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் அடிப்படை தேவைகளான மின்விளக்கு, குடி நீர், சாலைவசதிகள் ஏற்படுத்தி தர   நடவடிக்கை எடுக்கப்படும். கடப் பாறை ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் விவசாயம் செழிக்க அனுமந்தீர்த்தம், சந்திரப் பட்டி, புதூர்புங்கனை, எட்டிப்பட்டி,  தூவல் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளில் தடுப்பணை கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டேரி  ஒன்றிய கவுன்சிலர் வி.கோவிந்த சாமி பேசுகையில், தற்போது கடுமையான வறட்சி நிலவி வரு கிறது.

எனவே அனைத்து கிராமங் களுக்கும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க போர்க்கால அடிப்படை யில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மகாத்மா காந்தி தேசிய வேலை  உறுதி திட்ட  அட்டை  வைத்திருப் பவர்கள் அனைவருக்கும் வேலை  வழங்கி, சட்டபடியான கூலி வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சி களுக்கும் வேலை வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் பல ஊராட்சிகளில் கூலி நிலுவை உள்ளது. எனவே நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் ஊராட்சி ஒன்றியம் முழு வதும் கள்ளச்சாராய சந்துகடைகள் அதிகரித்துள்ளது. இதனால் கூலித்  தொழிலாளர்கள் பாதிக்கப்படு கின்றனர். கள்ளச்சாராய சந்துகடை களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூட்டத்தில் வலியுறுத்தினார்.