tamilnadu

தாராபுரம் ,உடுமலை மற்றும் அவிநாசி முக்கிய செய்திகள்

பிரதம மந்திரி வேளாண் திட்டத்தில்  

மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு


தாராபுரம், ஜூன் 10- பிரதம மந்திரி வேளாண் திட்டத்தில் மானியம் பெற விவசாயிகளுக்கு வேளாண்மை துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதுதொடர்பாக, தாராபுரம் வேளாண்மை உதவி இயக்குநர் லீலாவதி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் பிரதம மந்திரி வேளாண் பாசன திட்டத்தில் வேளாண் பயிர்கள் அனைத்திற்கும் சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. சிறு, குறு  விவசாயிகளுக்கு 100 சதவிகிதமும், இதர விவசாயி களுக்கு 75 சதவிகிதமும் மானியம் வழங்கப்படுகிறது. மக்காசோளம், கரும்பு, பயிறு வகை, நிலக்கடலை, தென்னை ஆகிய வேளாண் பயிர்களுக்கு சொட்டுநீர், தெளிப்பு நீர், மழைத்துவான் அமைக்க மானியம் பெறலாம். ஒரே நிலத்தில் பலவகை இடைவெளி உள்ள பயிர்கள் செய்யப்பட்டிருப்பின் விவசாயி தேர்வு செய்யும் ஏதேனும் ஒரு பயிருக்கு மானியம் வழங்கப்படும். ஏற்கனவே சொட்டுநீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் முழுமையுற்று இருந்தால் மீண்டும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.  பிரதம மந்திரி வேளாண் பாசன திட்டத்தில் பயன்பெற கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், விஏஓ சான்று, நில வரைபடம், போட்டோ ஸ்கெட்ச், விவசாயியின் போட்டோ, ரேசன்கார்டு நகல், ஆதார் அட்டை நகல், நீர் பரிசோதனை சான்று, மண் பரிசோதனை சான்று, சிறு, குறு விவசாயி  சான்று, கிணறு ஆவணம் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விப ரங்கள் தேவைப்படுவோர் தாராபுரம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள் ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலையில் 5 கிலோ சமையல் எரிவாயு உருளை அறிமுகம்

உடுமலை, ஜூன் 10- உடுமலை அடுத்த அம்மாபட்டியில் பாரத்கேஸ் சார்பில் 5 கிலோ சமையல் எரிவாயு உருளை அறி முக விழா நடைபெற்றது. உடுமலை பாரத்கேஸ் விநியோகஸ்தரான செல்விகேஸ் சார்பில் மத்திய அரசு அறிமுகப்படுத் தியுள்ள  5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளை அறிமுக விழா உடுமலை ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட அம்மா பட்டி கிராமத்தில் நடை பெற்றது. இதில் சமையல் எரிவாயு உருளை பயன்படுத்தும் முறை குறித்து செல்வி கேஸ் உரிமையாளர் எம்.பி.அய்யப்பன் மற்றும் பணியா ளர்கள் பொதுமக்களுக்கு விளக்கினர்.  இதுகுறித்து உரிமையாளர் அய்யப்பன் கூறுகையில், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்காக சுலபமாக, விலையும் குறைந்தும் இந்த சமையல் எரிவாயு உருளை தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சமையல் எரிவாயு உருளைக்கு  மானியம் உள்ளது. இந்த வசதி ஏற்கனவே உஜ்வாலா திட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்திக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

அவிநாசியில் ஜமாபந்தி  13ஆம் தேதி துவக்கம்

அவிநாசி, ஜூன் 10- அவிநாசி வட்டத்தில் 1428ஆம் பசலி ஆண்டுக் கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) ஜூன் 13ஆம் தேதி துவங்கி 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமா பந்தி நடைபெறும்விவரம்வருமாறு, ஜூன் 13ஆம் தேதி  (வியாழனன்று) சேவூர் உள்வட்டப்பகுதிகளான பொங்கலூர், ஆலத்தூர், மங்கரசவலையபாளையம், குட்டகம், போத்தம்பாளையம், புலிப்பார், தத்தனூர், புஞ்சைத்தாமரைக்குளம், வடுகபாளையம், பாப்பாங் குளம், சேவூர், தண்டுக்காரம்பாளையம், முறியாண் டாம்பாளையம், கானூர் ஆகியவற்றில் நடை பெறுகிறது.  ஜூன் 14ஆம் தேதி (வெள்ளியன்று) அவிநாசி மேற்கு பகுதிகளான இராமநாதபுரம் வேட்டுவ பாளையம், நம்பியாம்பாளையம், கருவலூர், உப்பிலிபாளையம், தெக்கலூர் செம்பிய நல்லூர், வேலாயுதம்பாளையம், புதுப்பாளையம் வடக்கு ஆகியவற்றில் நடைபெறுகிறது.   ஜூன் 18ந் தேதி (செவ்வாயன்று) அவிநாசி  கிழக்கு உள்வட்டப்பகுதிகளான  கணியாம்பூண்டி, ராக்கியாபாளையம், பழங்கரை, கருமாபாளையம், சின்னேரிபாளையம், நடுவச்சேரி, அய்யம்பாளை யம், துலுக்கமுத்தூர் ஆகியவற்றில் நடைபெறுகிறது. ஜூன் 19ஆம் தேதி (புதனன்று) பெருமாநல்லூர் உள்வட்டப்பகுதிகளான  ஈட்டிவீரம்பாளையம், தொரவலூர், மேற்குப்பதி, சொக்கனூர், பட்டம் பாளையம், வள்ளிபுரம், பெருமாநல்லூர் ஆகியவற் றில் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள்  கோரிக்கைகளை நேரடியாக மனுக்களாக கொடுத்து  உடனடித் தீர்வு காணலாம் என வருவாய்த்துறையி னர் தெரிவித்துள்ளனர்.