tamilnadu

img

பொள்ளாச்சி ஆச்சிபட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

 வேலூர் ஆக. 16- ஆம்பூர் அருகே கிராம சபைக் கூட்டத்தில் ஏற்பட்ட தகராறு  காரணமாக ஊராட்சி செயலரை கிராம மக்கள் சிறை பிடித்தனர். செங்கிலிகுப்பம் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி செயலர் சுப்பிர மணி 100 நாள் வேலை திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், மின் மோட்டார்கள் வாங்கியது, அண்ணா நகர் பகுதி யில் கால்வாய் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில்  முறைகேட்டில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரி வித்தனர். அப்போது சுப்பிரமணி மீது புகார் தெரிவித்த அதே பகுதி யைச் சேர்ந்த சிவா என்பவரை தாக்கி சட்டையை கிழித்த தாகக் கூறப்படுகிறது. இதனால் ஊராட்சி செயலரை சிறை பிடித்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மதியழகன் கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். இதையடுத்து கிராம  மக்கள் ஊராட்சி செயலர் மீது முறைகேடு புகார் மனு  அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட அவர், இதுகுறித்து  மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்ப தாகவும், வேறொரு நாளில் கிராம சபைக் கூட்டம் நடத்துவது  குறித்து உயரதிகாரிகளிடம் ஆலோசித்து தெரிவிப்பதாகவும் கூறினார்.