சேலம், நவ.8- சேலத்தில் அரசு மருத் துவமனைகளில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை கண் டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகா தார மருத்துவமனையில் நிலவும் சுகாதார சீர்கேடு களால் மருத்துவமனைக்கு வரும் பார்வையாளர்கள் நோயாளிகளாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இசிஜி, எக்ஸ்ரே, ஸ்கேன், எம்.ஆர்.ஐ போன்றவற்றை எடுக்க ஊழியர்கள் லஞ்சம் கேட் கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழ னன்று சிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தில் மாவட்ட செய லாளர் எ.மோகன் உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.