அதிகாரிகளின் மெத்தனப்போக்கு
சேலம், மே 20- சேலம் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கண் பரிசோதனை செய்ய ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சேலம் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் கண், காது பரிசோதனை செவ் வாயன்று நடத்தப்பட்டது. முன்னதாக, மாவட்டத்திலுள்ள 16 பணிமனைகளில் இருக்கும் தொழிலாளர்களுக்கும் ஒரே சமயத்தில் அழைப்பு கொடுக்கப்பட்டது. இதனால், தனி மனித இடைவெளி கடைபிடிக்காமல் போக்குவரத்து ஊழி யர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆயிரக்கணக்கில் திரண்ட னர். மேலும் கண், காது பரிசோதனைகளை அத்தனை பேருக் கும் ஒரே சமயத்தில் செய்வதில் பெரும் சிக்கல் ஏற் பட்டது. அரசு போக்குவரத்து அதிகாரிகளின் மெத்தன நட வடிக்கை தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற் படுத்தியது.