அவிநாசி, ஆக. 22- மேற்கு மண்டல தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டி அவிநாசி அருகே பழங்கரை தனியார் பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மேற்கு மண்ட லம் சார்பில் தீயணைப்பு வீரர்களுக் கான விளையாட்டுப் போட்டி வியா ழனன்று நடைபெற்றது. கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி,ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தீய ணைப்புத்துறை வீரர்கள் பங்கேற் றனர். இதில் புதனன்று துவங்கிய விளையாட்டு போட்டியில் கயிறு ஏறுதல், நீச்சல், கலாச்சார போட்டி கள் உள்ளிட்டவைகள் நடைபெற் றது. இரண்டாவது நாளான வியாழக் கிழமை உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம், தடுப்பு ஓட்டம் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மேற்கு மண்டல இணை இயக்குனர் விஜய் சேகர் தலைமை வகித்து பரிசளித்தார். இந்த விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய அணி முதல் இடமும், திருப்பூர், திண் டுக்கல் அணி இரண்டாம் இடமும், கோவை, நீலகிரி அணி மூன்றாவது இடமும் பெற்றன. தடகளப் போட்டி யில் திருப்பூர், திண்டுக்கல் முதலிடம், கோவை, நீலகிரி இரண்டாம் இடம், ஈரோடு, நாமக்கல் மூன்றாவது இடம் பெற்றது.