ஈரோடு, ஜூன் 27- ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மடிக்கணினி கேட்டு முற்றுகையிட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் புதனன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த னர். இதன்பின் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த 2017-18 ஆம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்ப டும் மடிக்கணினி இன்னும் வழங்கப்பட வில்லை. இந்நிலையில் நடப்பாண்டில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாண விகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள் ளது. எனவே, 2017-18 ஆம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகளுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மடிக்கணினி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் மீது ஈரோடு வீரப்பன்சத்தி ரம் பகுதியில் காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இது கண்டிக்கத்தக்க தாகும். குறிப்பாக, மடிக்கணினி கேட்டு மனு அளிக்க இருந்த மாணவ, மாணவியர் களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டியுள்ளனர். இதேபோல், இது குறித்து சட்டமன்ற உறுப்பினரிடம் தெரி வித்தபோது அவரும் மாணவர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி கொச்சைப் படுத்தியுள்ளனர். இதுவும் கண்டிக்கத்தக்க செயலாகும் என ஆவேசமாக தெரிவித்த னர். மேலும் கல்லூரிகளில் பிராஜெட் பணிகள் செய்வதற்கு மடிக்கணினி மிக முக்கியமானதாக உள்ளது. வசதியுள்ள மாணவ, மாணவிகளுக்கு அவரது பெற் றோர்கள் புதியதாக மடிக்கணினி வாங்கி கொடுக்கிறார்கள். ஏழை, எளிய மாணவர்க ளுக்கு அரசு தரப்பில் கொடுக்கும் மடிக் கணினி மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். எனவே, மடிக்கணினி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கிடையே, இப்போராட்டத்தை யொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை யினர் குவிக்கப்பட்டு இருந்தனர். இவர் கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட வந்த மாணவ, மாணவிகளை தனித்தனி யாக பிரித்து அராஜக முறையில் வரிசைப் படுத்தி அவர்களிடம் கையெழுத்து வாங்கி, மிரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு மாணவ, மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்த தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற் பட்டது.