tamilnadu

img

தாராபுரம் புத்தக கண்காட்சி துவக்கம்

தாராபுரம், ஆக. 16 - தமுஎகச சார்பில் தாராபுரத்தில் 6 ஆம் ஆண்டு புத்தக கண்காட்சி வெள்ளியன்று துவங்கியது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 6 ஆம் ஆண்டு புத்தக கண்காட்சி வெள்ளியன்று மாலை தளவாய்பட்டிணம் சாலையில் உள்ள சிவ ரஞ்சினி மகாலில் துவங்கியது. புத்தக கண்காட்சியின் வரவேற்புகுழு தலை வர் தமிழ்நாடு ஆட்டோஸ் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற துவக்க விழா வில் தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமார் பங்கேற்று புத்தக கண்காட்சியை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். தமிழ்க் கலை மன்ற கல்வி அறக்கட்டளை தலை வர் வி.நா.ஆறுச்சாமி முன்னிலை வகித் தார். முதல் விற்பனையை தாராபுரம்  சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.காளிமுத்து தொடங்கி வைத்தார். தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார்.  தாராபுரம் நகராட்சி ஆணையாளர் லட்சுமணன், தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் இரா.ஈஸ்வரன், ச.முருகதாஸ், பிசர்தார் கல்லூரி முதல்வர் ஆர்.உதயக் குமார், மகாராணி கலை அறிவியல் கல் லூரி முதல்வர் முனைவர் தமிழ்செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமு எகச தாராபுரம் கிளை தலைவர் இரா.நட ராஜன் வரவேற்புரையாற்றினார்.

இந் நிகழ்ச்சியில் வரவேற்புக்குழு செயலாளர் கி.சீரங்கராயன், பொருளாளர் முத்துச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண் டனர்.  முடிவில் தமுஎகச துணை செயலா ளர் இரா.குப்புசாமி நன்றி தெரிவித்தார். முன்னதாக, தாராபுரம் காமராஜ புரத்திலிருந்து பொய்க்கால் ஆட்டத்துடன் புத்தக கண்காட்சி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி தாராபுரம் பெரியகடைவீதி, பூக்கடை கார்னர், சர்ச் ரோடு, உடுமலைரோடு வழியாக புத்தக கண்காட்சி திடலை அடைந்தது. இந்த புத்தக கண்காட்சி ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை பத்து நாள்கள் நடைபெற உள்ளது. புத்தக கண்காட்சியையொட்டி நாள்தோ றும் மாலை 6.30 மணிக்கு பல்வேறு தலைப் புகளில் துறை சார்ந்த வல்லுநர்கள், கவி ஞர்கள், கருத்தாளர்கள் உரை நிகழ்த்த உள்ளனர். புத்தக கண்காட்சியை முன் னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்க ளுக்கு கட்டுரை, கவிதை, ஓவியம் ஆகிய தலைப்புகளில் கலை இலக்கிய திறனாய்வு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 21 ஆம் தேதி மாலை பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங் கப்படுகிறது.