உதகை, நவ. 10- உதகை தோழர் சின்னதுரை நினைவக அடிக்கல் நாட்டு விழா கோத்தகிரியில் சனியன்று நடை பெற்றது. எஸ்சிடி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட தோழர் எஸ்.சின்னதுரை அரசு போக்கு வரத்து துறையில் பணியாற்றினார். இடதுசாரி இயக்கத்தின் மீது ஏற் பட்ட பிடிப்பின் காரணமாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து முன்னணி ஊழியராக செயல்பட்டார். கோத்தகிரி பகுதி யில் வாலிபர் சங்கம் உள்ளிட்ட வர்க்க, வெகுஜன ஸ்தாபனங்களை உருவாக்கி சிறந்த வழிகாட்டியாக செயல்பட்டார். அர்ப்பணிப்பு மிக்க செயல்பாட்டினால் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாவட் டச் செயலாளர், பாரதியார் போக்கு வரத்து கழக சிஐடியு சங்கத்தின் பொதுச் செயலாளர், சிஐடியு மாவட்ட செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என பல் வேறு பொறுப்புகளில் திறம்பட செயல்பட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சின்னதுரை நோய்வாய்ப்பட்ட காலத்தில் கூட இயக்கப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டார். இந் நிலையில் தனது 48 ஆவது வயதில் இயற்கை எய்தினார். தோழர் எஸ்.சின்னதுரை அவர்களின் நினை வைப் போற்றும் விதமாக கோத்த கிரியில் உள்ள ஜான்சன் ஸ்கொயர் பகுதியில் அவரின் பெயரில் அமைய உள்ள நினைவகத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா சனியன்று நடைபெற் றது. இவ்விழாவிற்கு சிஐடியு மாவட்ட தலைவர் கே.சுந்தரம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக் கமிட்டி செயலாளர் வி.மணிகண் டன் வரவேற்றார். சிஐடியு மாநில செயலாளர் கே.சி.கோபிகுமார் கொடி ஏற்றினார். போக்குவரத்து ஊழியர் சங்க கௌரவ தலைவர் காளியப்பன், சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.ரமேஷ், விவசாயி கள் சங்க மாவட்ட தலைவர் என்.வாசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர். காந்தி ஆகியோர் அடிக்கல் நாட்டினர். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட் டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் ஆகியோர் தோழர் எஸ்.சின்னதுரை யின் தியாகத்தை நினைவு கூர்ந்து பேசினர். மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஜெ.ஆல்தொரை, கே.ராஜன், எல்.சங்கரலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் லீலா வாசு, கே.மகேஷ், சிஐடியு மாவட்ட பொருளாளர் எ.நவீன் சந்திரன், மரம் மற்றும் பொது தொழி லாளர் சங்கத்தின் தலைவர் மணி மோகன், பொதுச் செயலாளர் முரு கேசன், அங்கன்வாடி ஊழியர் சங்கத் தலைவர் கவிதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர். முடிவில் தென்மண்டல போக்கு வரத்து ஊழியர் சங்க துணை தலை வர் எம்.சாமிநாதன் நன்றி கூறி னார்.