கோவை, ஏப். 9-பாஜக அரசு மீண்டும் வருமானால் நிரந்தர தொழிலாளர்கள் என்பதே இல்லாமல் உரிமைகள் பறிக்கப்பட்ட நவீன கொத்தடிமை முறைக்கு தள்ளப்படுவார்கள் எனசிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் கூறினார்.கோவை மக்களவை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து செவ்வாயன்று ஜி.சுகுமாறன் வாக்கு சேகரித்தார். கோவை அருகே ராக்கிபாளையம் பிரிவில் டைமெக்சன் டைமண்ட் தொழிலாளர்களிடையே வாக்கு கேட்டு அவர் பேசியதாவது: வளர்ச்சியை சொல்லி 2014இல் பாஜக வாக்கு கேட்டது. ஆனால், பாஜக ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி 20 ஆண்டுகள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளதாக இப்போது அறிஞர்கள்கூறுகிறார்கள். நமது பாரம்பரியமான தொழில்களைக்கூட கார்ப்பரேட் கம்பெனிகள் சூறையாட வழிவகுக்கப்பட்டுள்ளது. பாஜக அரசு மீண்டும் வருமானால் நிரந்தரதொழிலாளர்கள் என்பதே இல்லாமல் உரிமைகள் பறிக்கப்பட்ட நவீன கொத்தடிமை முறை ஏற்படும். தொழிலாளர்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் வாதாடிமீட்டுத்தர பி.ஆர்.நடராஜனுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில் சிஐடியு மாநில-மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.