tamilnadu

img

மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

அவிநாசி, ஜூலை 19- அவிநாசி அருகே பள்ளி மாணவர்கள்,  துப்புரவு தொழிலாளர்கள் பங்கேற்ற மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அவிநாசி பேரூராட்சி சார்பில் மழைநீர் சேக ரிப்பு அவசியம் குறித்து விளக்கி அரசு ஆரம்பப் பள்ளி மாணவ ,மாணவிகள், பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி வெள்ளியன்று நடைபெற்றது. இப்பேரணி அரசு ஆரம்பப் பள்ளியில் தொடங்கி குலாலர் கல் யாண மண்டபம் வழியாகச் சென்று  மீண்டும் அரசுப்பள்ளியில் நிறைவடைந்தது. இப்பேரணியில் பங்கேற்றோர் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து விளக்கும் பதாகைகளை ஏந்தியவாறு சென்றதுடன், அதுகுறித்தான துண்டறிக்கைகளை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.