கோவை, ஜுன் 30 - பெற்றோருடன் தள்ளுவண்டி கடையில் வியாபாரம் செய்த வந்த 16 வயது சிறுவனை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியது தொடர்பாக விளக்கம் கேட்டு மாநில மனித உரிமைகள் ஆணையம் கோவை மாநகர காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை ரத்தினபுரி பகுதியில் கடந்த ஜூன் 19 ஆம் தேதி இரவு தள்ளுவண்டியில் வேலுமயில் என் பவர் தனது மனைவி மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மகனுடன் டிபன் வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட் டிருந்த ரத்தினபுரி உதவி காவல் ஆய்வாளர் செல்லமணி, தனிமனித இடைவெளியின்றி வியாபாரம் செய் வதாகக் கூறி கடையை மூட எச்சரித் தார். அப்போது வேலுமயிலும், அவ ரது மனைவியும் உதவி ஆய்வாளரி டம் இப்போதுதான் கடையில் வியாபாரம் நடைபெறுகிறது சிறிது நேரத்தில் கடையை சாத்திவிடு கிறோம் என பதிலளித்தனர். இதனை செவிமடுக்காத காவல் உதவி ஆய்வாளர் கடைக்கார பெண்மணி மற்றும் அவரது கணவரை ஒருமை யில் பேசினார்.
தனது பெற்றோரை திட்டியதை பொறுக்க முடியாத கடைக்காரரின் மகன், உதவி ஆய் வாளர் வந்த இருசக்கர வாகனத்தில் இருந்து சாவியை எடுத்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த காவல் உதவி ஆய்வாளர் செல்லமணி உள் ளிட்ட காவலர்கள் சிறுவனை லத்தியால் தாக்கியுள்ளனர். மேலும், சிறுவனை காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற நிலையில், அவரை அங்கு வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. அதன் பின் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி திருப்பி அனுப்பியுள்ளனனர். இதற்கிடையே காவல்துறையினர் சிறுவனை அடிக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பர வியது. இந்த நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் இச்சம்பவத்திற்கு இரண்டு வாரங் களுக்குள் பதில் அளிக்குமாறு விளக்கம் கேட்டு, கோவை மாநகர காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.