கோயம்புத்தூர், நவ. 5- ஆசிய பசிபிக் பிராந்திய பொருளாதார ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திடுவதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திங்களன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 44 நாடுகளுடன் தாராள வர்த்தக பொருளாதார ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட உள்ளது. இதனால் வெளிநாட்டு விவசாயி கள் விளைவிக்கும் அனைத்துப் பொருட்களும் பன்னாட்டு நிறு வனங்கள் எவ்வித இறக்குமதி வரியுமின்றி இந்திய சந்தைகளில் இறக்குமதி செய்யும் நிலை ஏற்படும். மேலும்இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டல் பால் மற்றும் பால் பொருட்கள், இறைச்சி, தானியங்கள், பழங்கள், உணவு எண்ணெய் உள்ளிட்டவை எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி, இறக்கு மதி செய்யப்படும் சூழல் ஏற்படும். இதனால் இந்திய விவசாயம் பாதிப்பிற்குள்ளாகும். இந்திய சந்தை முழுவதும் அந்நிய நாடுகளின் கைகளுக்கு சென்றுவிடும். எனவே மத்திய அரசு ஆசிய பசிபிக் பிராந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடாது என வலியுறுத்தி நாடு முழுவதும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் திங்களன்று மாநிலம் முழுவதும் கண்டன இயக்கத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் ஒருபகுதியாக கோவை சூலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் கண்டன உரையாற்றினார். மாநில துணை செயலாளர் எஸ்.ஆர்.மதுசூதனன், சிபிஎம் சூலூர் தாலுகா செயலாளர் எம்.ஆறுமுகம், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி மற்றும்எஸ்.கருப்பையா, ஏ.காளப்பன், ஜே.ரவீந்திரன், சி.திருமலைசாமி, கே.தங்கவேல், விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கொசவம்பாளையம் சாலைப் பிரிவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் உரையாற்றி னார். பல்லடம் வட்டார செயலாளர் வை.பழனிசாமி தலைமை தாங்கினார். மாநில தென்னை ஒருங்கிணைப்புக் குழுவின் கன்வீனர் விஜயமுருகன், மாவட்ட செயலாளர் ஆர்குமார், மாவட்ட நிர்வாகிகள் செ.முத்துக்கண்ணன், எஸ்.வெங்கடாசலம், எஸ்.கே.கொளந்தசாமி, பி.வேலுச்சாமி உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.