கோவை,பிப்.5– மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத பட் ஜெட்டை கண்டித்து கோவையில் புதனன்று இந்திய தொழிற்சங்க மையத்தினர் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மோடி தலைமையிலான மத் திய அரசின் 2020 ஆம் ஆண்டிற் கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கை முழுவதும் மக்கள் விரோத,தொழிலாளர் விரோத நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. விலைவாசி உயர்வுக்கு தீர்வு காணாத, வேலை யிண்மை பிரச்சனை குறித்து பேசாத, பொருளாதார மந்தத் திற்கு தீர்வை சொல்லாத, கோடிக் கணக்கான முறை சாரா தொழிலா ளர்களின் நலன், விவசாயிகளின் நலன் குறித்து பேசாத நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள் ளது. குறிப்பாக எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியார்மயப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் கண்டன இயக்கத்திற்கு சிஐடியு அறைகூவல் விடுத்துள்ளது. இதன்ஒருபகுதியாக கோவை யில் சிவானந்தகாலனி பவர் ஹவுஸ் அருகில் சிஐடியு கோவை மாவட்டக்குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநா பன், மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளா ளர் ஆர்.வேலுசாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் சிஐடியு நிர்வாகிகள் கே.மனோ கரன், பி.சந்திரன், ஏ.எம்ரபீக், ஏ.எல்.ராஜா, கே.ரத்தினகுமார், என்.செல்வராஜ், பழனிச்சாமி உள்ளிட்ட திரளானோர் பங் கேற்று மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.