tamilnadu

img

தருமபுரியில் அரசு ஊழியர் சங்க ஆண்டு அமைப்பு தினவிழா

தருமபுரி, மே 7-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 36-வது அமைப்புதினத்தையெட்டி தருமபுரி மாவட்டம் முழுவதும் அமைப்புதினவிழா மற்றும் கொடியேற்றுவிழா நடைபெற்றது.தருமபுரி மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன்பு அமைப்புதினகொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டத் தலைவர்எம்.சுருளிநாதன் தலைமை வகித்தார். இதில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன கொடியை மாவட்ட செயலாளர் ஏ.சேகர் ஏற்றிவைத்தார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க கொடியை மாவட்ட துணைத் தலைவர் எம.யோகராசு ஏற்றிவைத்தார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர்கே.புகழேந்தி, கூட்டுறவுத்துறைஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜி. பழனியம்மாள் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சி .காவேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்ட செயலாளர் கே.பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர்எம்.சுருளிநாதன் கொடியேற்றிவைத்தார். மாவட்ட செயலாளர் ஏ.சேகர், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சி.காவேரி, நிர்வாகி மதலைமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்ட துணைத் தலைவர்சுதாகர் தலைமை வகித்தார்.மாவட்ட துணைத் தலைவர் பி.எஸ்.இளவேனில் சங்ககொடியை ஏற்றிவைத்தார்.பாப்பிரெட்டிபட்டி ஊராட்சிஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற விழாவில் வட்டதலைவர் சண்முகம் சங்க கொடியை ஏற்றினார். வட்டசெயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நில அளவைத் துறை ஒன்றிப்பின் மாநில துணைத் தலைவர் அண்ணா, குபேரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற அமைப்பு தின விழாவிற்கு வட்ட தலைவர் எஸ்.குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்டதுணைத்தலைவர் எம்.சிவப்பிரகாசம் சங்க கொடியேற்றினார்.