கோவை, செப். 5- கோவை கரும்புக்கடை பகுதி யில் உள்ளபழுதான சாலைகளை அரசு அதிகாரிகள் கவணத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் “புகைப்பட போராட்டம்” என்ற நூதன போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்னர். சமூக ஊடகங்கள் மக்கள் பிரச் சனைகளை அனைவரின் பார் வைக்கு கொண்டுசெல்லும் பாலமாக மாறிவருகிறது. உலக அரசியல் முதல் உள்ளூர் பிரச்சனை கள் வரை சமூக ஊடங்கங்கள் மூல மாக மக்களிடம் சென்றடைகிறது. தற்போது சமூக ஊடகங்கள் உத வியுடன் “ புகைப்பட போராட்டம்” என்ற நூதன போராட்டத்தை கோவை கரும்புக்கடை பகுதினர் துவங்கியுள்ளனர். கோவையின் கரும்புக்கடை பகுதியில் உள்ள சாலைகள் பல வருடங்களாக சேதமடைந்துள்ளது. மேலும் அடிப்படை வசதிகள் குறை வாக உள்ளது. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த உள்ளாட்சி தேர்தலில் போது சாலை போடப் பட்டது. அதன்பின் அரசு அதிகாரி கள் சாலைகளை கண்டுகொள்ள வில்லை. இந்நிலையில் “புகைப்பட போராட்டம்” என்ற நூதன போராட் டத்தின் மூலம், சேதமடைந்த சாலை கள் மற்றும் அப்பகுதி அடிப்படை வசதிகளின் நிலை குறித்த புகைப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மோசமான செயல்பாட்டினை அரசு அதிகாரிகள் மற்றும் மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் நூதன போராட்டம் துவங்கி யுள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் வசிக் கும் ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந் தின் செயல்பாட்டாளர் அப்துல் ஹக்கீம் கூறுகையில், கரும்புக் கடை பகுதி பல வருடங்களாக மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதி யாக மாவட்ட நிர்வாகிகளால் பார்க் கப்பட்டு வருகிறது. இங்கு அடிப் படை வசதிகள் மிகவும் குறைவு. குறிப்பாக சாலைகள் அனைத்தும் பல வருடங்களாக பழுதாகியுள்ளது. இந்த சாலைகளில் வாகன ஓட்டி கள் மற்றும் பாதசாரிகள் என அனைவரும் சிரமத்திற்கு ஆளா கின்றனர். சாலை விபத்துகள் இங்கு அதிகமாக நடககிறது. மேலும், இந்த சாலைகள் அனைத்தும் கடந்த உள்ளாட்சி தேர்தலில் போது போடப்பட்டது. அடுத்த உள்ளாட்சி தேர்தல் வந்தா லாவது சாலைகளை சரி செய்வார் களா என்ற கேள்வி எழுகிறது. ஆகவே அவலங்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவி டும் நூதன போராட்டத்தை துவக் கியுள்ளோம் என்றார். ஹேப்பி தியோட்டர் அணியினர் கூறுகையில், கரும்புக்கடை பகுதி யில் முக்கிய சாலைகளாக இருக் கும் சரமேடு சாலை, பாத்திமா நகர் சாலை மற்றும் புல்லுகாடு சாலை இவை மூன்றும் மிக மோசமாக பழு தடைந்துள்ளது. உக்கடம் மேம் பால வேலைகள் காரணமாக இங்கு அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படு கிறது. ஆகவே, புகைப்பட போராட் டம் மக்களிடம் தீவிரம் அடையும் முன் அரசு அதிகாரிகள் சாலை களை விரைவாக வந்து சரிசெய்து தருவார்கள் என நம்புவதாக தெரிவித்தனர்.