tamilnadu

img

அரசு அதிகாரி மீது அதிமுகவினர் கொலைவெறித் தாக்குதல்

காவல்துறையினர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக புகார்

கோவை, நவ.8- கோவையில் ஊராட்சி செயலர் மீது  அதிமுக பிரமுகர்கள் கொலை வெறித்தாக்கு தல் நடத்தியள்ள நிலையில், சம்பந்தப் பட்ட குற்றவாளிகள் மீது காவல்துறை யினர் நடவடிக்கை எடுக்காமல் கட்டப் பஞ்சாயத்து செய்வதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கோவை பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியில் செயலராக செந்தில் குமார் என்பவர் கடந்த 5 வருடங்களாக  பணிபுரிந்து வருகிறார்.  இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு செந்தில்குமார் வீட்டிற்கு சென்ற ஐந்துக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் மது அருந்தி விட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர் செந்தில்குமாரை கடுமை யாக தாக்கியுள்ளனர். இதனால் நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார். இதனைய டுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். இதுகுறித்து பேரூர் காவல் நிலையத் தில் செந்தில்குமாரின் மனைவி கார்த்தி காயனி புகார் அளித்துள்ள சூழலில், காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து செந்தில்குமாரின் உற வினர்கள் கூறுகையில், இப்பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் அதிமுகவினர் சிலர் செந்தில்குமார் வீட்டிற்கு முன்பு மது அருந்திவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, போன் செய்தால் எடுக்க மாட்டாயா, வெளியே வா எனக்கூறி மிகவும் ஆபாச மாக வசைபாடியுள்ளனர். இதனால் வெளியே வந்த செந்தில்குமார் எங்கள் வீட்டில் பெண்கள், குழந்தைகள் உள்ளனர். காலை அலுவலகத்திற்கு வாருங்கள். உங் கள் கோரிக்கையை அரசுக்கு சொல்லி நிறைவேற்ற சொல்கிறேன் என தெரி வித்தார்.

ஆனால், இதுகுறித்து எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் வெளியே வந்த செந்தில்குமாரை அவர்கள் கடுமையாக தாக்க தொடங்கினர். இந்த தாக்குதலினால் நிலை குழைந்த அவர் மயங்கி கீழே விழுந்த பிறகே விட்டுச்சென்றனர். இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. மாறாக விசாரணை என்கிற பெய ரில் எங்களின் புகாரை திரும்பப் பெறுவ தற்கான அழுத்தத்தை மட்டுமே காவல் துறையினர் மேற்கொள்கின்றனர். மேலும் அடித்தவர்கள் அதிமுகவினர் என அனை வருக்கும் தெரிந்தும், காவல்துறையினர் மர்மநபர்கள் என்பது போல் சித்தரிப்பதாக குற்றம்சாட்டினர்.   இதுகுறித்து செந்தில் குமாரின் மனைவி கார்த்திகாயினி கூறுகையில், தன் கணவர் அரசு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த நவ.5 ஆம் தேதியன்று இரவு 11 மணிக்கு மேல் ஐந்து பேர் கொண்ட குழுவி னர் அவரை தாக்கினர். மேலும், எங்கள் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுத் தனர். மறுநாள் காலை பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இது தொடர்பாக எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல் மெத்தன போக்கு காட்டி வருகிறார்கள்.  ஒரு அரசு அதிகாரி மீது  கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார் அளித்தும் காவல்துறை நடவ டிக்கை எடுக்காதது அதிர்ச்சியளிக்கிறது. அரசு அதிகாரியின் மீதான தாக்குதலுக்கே நடவடிக்கை எடுக்காத நிலையில் பொது மக்களை எப்படி பாதுகாப்பார்கள் என வேதனையோடு தெரிவித்தார்.  இதற்கிடையே, அரசு அதிகாரியின் மீது அதிமுக பிரமுகர்கள் நடத்திய தாக்குதல் சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.