states

img

கொசுக்கடியைத் தடுக்காத அரசு அதிகாரி சஸ்பெண்ட்..... கொதித்தெழுந்த ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்....

போபால்:
தங்கியிருந்த அறையில் கொசுத்தொல்லை; விடிய விடிய டேங்கில் வழிந்தோடிய தண்ணீர் ஆகியவற்றால், எரிச்சலடைந்த ம.பி. மாநில பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அதிகாரி ஒருவரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் உள்ள வீட்டில் சிறப்பு விருந்தினராக அம்மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் தங்கியுள்ளார். அங்கு கொசுத்தொல்லை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், தண்ணீர் டேங்கில் நீர் நிறைந்து வழிந்தோடியதாகவும் கூறப்படுகிறது.தங்குமிடத்தில் கொசு வலைகள் கூட இல்லை என்பதை அறிந்த சிவராஜ் சவுகான், அதிகாரிகளை கடிந்து கொள்ளவே,  நள்ளிரவு 2.30 மணிக்கு அறை முழுவதும் கொசு மருந்து அடிக்கப்பட்டுள்ளது.ஆனாலும், தண்ணீர் டேங்கில் இருந்து அதிகாலை 4 மணி வரை நீர் வழிந்து கொண்டே இருந்துள்ளது. அது நிற்கவில்லை. இதனால் சிவராஜ் சிங் சவுகான் எரிச்சல் அடைந்ததாகவும், இதன்பின், அவரே எழுந்துபோய் மோட்டாரை நிறுத்தியதாகவும் கூறுகின்றனர்.இந்நிலையில், முதல்வர்தங்குமிடத்தில் முறையான பராமரிப்பு பணியை மேற்கொள்ளாத காரணத்திற்காக, சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரி பாபுலால் குப்தா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாபுலால் குப்தா, தனது கடமையை செய்யத் தவறியதால் மாவட்டத்தின் மானமே கப்பல் ஏறிவிட்டதாக, டிவிஷனல் கமிஷனர் ராஜேஷ் குமார் ஜெயின் நோட்டீஸூம் வழங்கியுஉள்ளார்.