tamilnadu

img

ஏழை, எளிய மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுக கோவை எம்.பி. தலைமையில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

கோவை, செப்.12- ஏழை, எளிய மக்களை அப் புறப்படுத்தும் நடவடிக்கையை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என வலியு றுத்தி கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் பொதுமக்கள் வியாழனன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  கோவையில் முத்தண்ணன் குளம், கணபதி, உக்கடம், இந் திராநகர் , வ.உ.சி நகர், காசிகவுண் டன் புதூர், குமாரசாமி காலனி உட்பட பல்வேறு பகுதிகளில்  நீண் டகாலமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை, எளிய  மக்கள் வசித்து வருகின்றனர்.  இம்மக் களை குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் மூலம்  வீடுகள்  கட்டி கொடுத்து புறநகர் பகுதி களுக்கு நிர்பந்தப்படுத்தி மாற்றி  வருகின்றனர்.  இவ்வாறு நிர்பந் திப்பின் காரணமாக சிலர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு களுக்கு சென்று விட்டாலும்  அங்கு குழந்தைகளின் படிப்பு, வேலை போன்றவைகளுக்கு  பெரும் சிரமங்கள் ஏற்படுவதால் பலரும் இடம் பெயராமல் இருக் கின்றனர். இந்நிலையில் தங்களுக்கு  நகர் பகுதியிலயே மாற்று இடம்  தரக்கோரி வியாழனன்று  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தின்  முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட  பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமையில் காத்தி ருப்பு மற்றும் முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது, ஊருக்கு வெளியே கட்டிகொடுக் கப்படும் அடுக்குமாடி குடியிருப்பு களுக்கு செல்ல முடியாது எனவும், நகரில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு குளக்கரைகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா தர வேண்டும் என வலியுறுத்தினர்.  இதன்பின், இம்மக்களின் கோரிக்கை  குறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரு வாய்  துறை அதிகாரிகள் மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிக ளிடம்  பேச்சுவார்த்தை நடத்தி னார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகை யில்,  நகர்ப் பகுதியில் நீண்ட கால மாக வசிக்கும் பொது மக்களை அப்புறப்படுத்தக் கூடாது.  நகர்  பகுதியில் இருக்கக்கூடிய அர சுக்குச் சொந்தமான இடங்கள்  அல்லது தனியார் இடங்களை பணம் கொடுத்து வாங்கி இந்த மக்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம். கோரிக் கைகள் குறித்து அரசு அதிகாரி களிடம் தெரிவித்துள்ளோம். மாவட்ட ஆட்சியர் சென்னையில் இருந்து திரும்பியவுடன் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி களுடன் ஆலோசித்து உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தள்ளனர். தேவைப்பட் டால் மீண்டும் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஒன்று கூடி கோரிக்கைகளை வலியு றுத்துவோம் என தெரிவித்தார்.  இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடியிருந்த பொதுமக்கள் கலைந்து சென்ற னர். முன்னதாக, இப்போராட்டத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், கிழக்கு நகர செயலாளர் என். ஜாகிர். சிபிஐ மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், சிபிஐ (எம்எல்), பாலசுந்தரம், வேல்முருகன், விடு தலை சிறுத்தைகள் கட்சியின் சுசி.கலையரசன் மற்றும் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் பலர் பேச்சுவார்த்தையி்ல் பங்கேற்ற னர்.