tamilnadu

img

ஆட்டோ தொழிலாளர்கள் மீது பொய் வழக்குப் போடுவதை கைவிடுக

நாமக்கல். ஜூலை 29- ஆட்டோ  தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் பொய் வழக் குப் போடுவதை கைவிட வேண் டும் என வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர் சங்கம் சிஐடியு மகா சபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. நாமக்கல் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சிஐயு மாவட்ட 13 வது மகாசபை கூட்டம் சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில் சங் கத்தின் மாவட்டத் தலைவர் ஏ. தண்டபாணி தலைமையில் நடை பெற்றது. மாவட்ட குழு உறுப்பினர்  பி.ஜேபி அஞ்சலி தீர்மானம் வாசித் தார். மாவட்ட துணை தலைவர் பி.பொன்னுசாமி வரவேற்புரை யாற்றினார். இப்பேரவையை சிஐ டியு மாவட்ட தலைவர் பி.சிங்காரம் துவக்கி வைத்து பேசினார். சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஏ.கே.சந் திரசேகரன், மாவட்ட துணை செய லாளர் சு.சுரேஷ், சிஐடியு அரசு போக்குவரத்து கழக இணைச் செய லாளர் வி.பழனிவேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.சுந்தர ராஜ், பொருளாளர் ஜி.ஜெயராமன் ஆகியோர் அறிக்கையை முன் வைத்து பேசினர்.

தீர்மானங்கள்

தமிழ் நாடு முழுவதும் ஆட்டோ ஓட்டுனர்கள் சுயதொழில் செய்து கொண்டு தங்களது வாழ்க்கை நிலையை நடத்தி வரும் சூழ்நிலை யில்  மாவட்ட காவல்துறையினர் விபத்து நடைபெறும் இடங்களில் ஆட்டோ ஓட்டுநர்களை  சாட்சி சொல்ல வேண்டும் என கட்டாயப் படுத்துவதை கைவிட வேண்டும். மறுக்கும் பட்சத்தில் அவர்கள் மீது பொய் வழக்குப் போடுவதையும் கைவிட வேண்டும். ஆட்டோ  தொழி லாளர்களுக்கு நல வாரிய பணப் பயன்கள் உடனடியாக வழங்க வேண்டும். எட்டாம் வகுப்பு வரை கல்வி பயிலாதவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும்.  ஆட்டோ வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைத்திட வேண் டும். ஆட்டோ தொழில்களுக்கு பெட்ரோல், டிசல், கேஸ் உள்ளிட் டவைகள் மானிய விலையில் வழங்க வேண்டும்.  மும்மொழி கல்விக் கொள்கையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.  என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து சங்கத்தின் புதிய மாவட்ட தலைவராக ஏ. தண்டபாணி, மாவட்ட செயலாள ராக என்.சுந்தரராஜ, மாவட்ட பொருளாளராக ஜி.ஜெயராமன், துணை தலைவர்களாக பி.பொன்னு சாமி, சி.கந்தசாமி, துணைச் செயலா ளர் பி.நாகராஜ் உட்பட 15 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது சிஐடியு மாநில துணைத் தலை வர் ஆர்.சிங்காரவேலு நிறைவுரை யாற்றினார். முடிவில் நாமக்கல் ஆட்டோ சங்க கிளை செயலாளர் டி.ராமசாமி நன்றி கூறினார்.