tamilnadu

img

கிடப்பில் போடப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் தோண்டப்பட்ட சாலையினால் பொதுமக்கள் அவதி

பொள்ளாச்சி, மார்ச் 6-  பொள்ளாச்சியில் பாதாள சாக் கடை திட்டத்திற்காக தோண்டப் பட்டு ஓராண்டு ஆகியும் சாலை கள் சீரமைக்கப்படாமல் உள்ள தால் பொதுமக்கள் பெரும் அவதிக் குள்ளாகியுள்ளனர். கோவை மாவட்டம், பொள் ளாச்சி பகுதிகள் முழுவதிலும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாதாள சாக்கடை திட்டத் திற்காக சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டன. ஆனால், இப்ப ணிகள் தற்போது வரை முடிக் கப்படாமல் நீண்டுகொண்டே செல்கிறது. குறிப்பாக, பொள் ளாச்சி நியூஸ்கீம் சாலை, பழநி மற்றும் திருப்பூர், உடுமலை ஆகிய வழித்தடங்களுக்கான முக்கிய பிர தான சாலையாக போக்குவ ரத்திற்கு அமைக்கப்பட்டது. இவ் வழியே தினமும் ஆயிரக்கணக் கான வாகனங்களான பேருந்து கள், லாரிகள், இருசக்கர வாகனங் கள் செல்கின்றன. மேலும், இவ்வ ழித்தடங்களின் இருபுறங்களி லும், தனியார் மருத்துவமனை கள் மற்றும் பொதுத்துறை, தனி யார் துறை வங்கிகள், வர்த்தக நிறு வனங்கள் என நூற்றுக்கும் மேற் பட்டவை செயல்பட்டு வருகின் றன.  இந்நிலையில், இச்சாலைகள் முழுவதும் தோண்டப்பட்டு மிக மோசமாக காட்சியளிப்பதால் இப் பகுதிகளில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதோடு,  விபத்துகளும் ஏற்படுகின்றன. சாலைகளின் இருபுறங்களிலும் அதிக அளவிலான இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், கடுமையான போக்குவரத்து நெரி சலும் ஏற்படுகிறது. சாலைகளின் பல பகுதிகளில் குழி தோண்டப்பட் டுள்ளதால், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, போக்குவரத்து நெரி சலை கட்டுபடுத்தும் வகையில்,  சாலைகளை விரிவாக்கம் செய் தும், தோண்டப்பட்ட குழிகளை சீர மைக்க வேண்டியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.