அரசு மருத்துவமனையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கோரி வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்து வர்கள் இல்லாததால் விபத்து, பிரசவம் உள்ளிட்ட அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அலைக்கழிப்புக்கு ஆளாகி வருகின்றனர். உள்கட்டமைப்பு வசதி செய்யாத அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட செயலாளர் எ.இலட்சு மணன், மாவட்ட செயலாளர் சிஎம்.பிரகாஷ், விதொச மாவட்ட தலைவர் பி.கணபதி செங்கம் பகுதி நிர்வாகிகள் எம்.வடிவேல், எம்.வெங்கடேசன், எஸ்.சுந்தரபாண்டியன் ஆர்.ரஞ்சித், ஜி.கோபால் தோழமை இயக்க தலைவர்கள் ஆர்.ஆறுமுகம்,எம்.சரவணன், எஸ்.சதீஷ் ,எம்.கே.காமாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.