சென்னை,ஜன.31- பிரபல கராத்தே மற்றும் வில்வித்தை வீரரான ஷிஹான் ஹூ`சைனிக்கு சென்னையில் இரட்டை முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. சூளைமேடு எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் முடநீக்கியல் பிரிவைச் சேர்ந்த மூத்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு, தேர்ந்த மயக்க மருந்து நிபுணர்கள், வலி மேலாண்மை நிபுணர்கள், மறுவாழ்வு மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த சிகிச்சையை அளித்தனர். இதுகுறித்து பிரபல முடநீக்கியல் மூத்த ஆலோசகர் டாக்டர் ஏ பி கோவிந்தராஜ் கூறுகையில் இரு மூட்டுகளிலும் விறைப்பும், வலியும் ஏற்படுவதால் உண்டாகும் கடுமையான கீல்வாதமே‘ இரட்டை முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான பொதுவான காரணம் ஆகும். இது வாழ்க்கைத் தரத்தைக் கடுமையாகக் குறைக்கும். இந்த தீவிரம் ஷூ மற்றும் சாக்ஸ் அணியக்கூட முடியாமல் வலியை உண்டாக்கும். நிற்கும்போதும் நடக்கும்போதும் வலி தீவிரமாகும். மூட்டு கீல்வாதம் நாளாக நாளாகத் தீவிரமடைந்து மோசமடையும். இளமையான, ஆரோக்கியமான, அதீத எடை இல்லாத, விறைப்பும், வலியும், அன்றாடச் செயல்பாடுகள் குறைந்தும் காணப்படும் நபரே இரட்டை மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்ற நோயாளி ஆவார். விளையாட்டு மற்றும் ஃபிட்நெஸ் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் ஷிஹான் ஹூ`சைன் மேற்கண்ட அடிப்படைகளை நிறைவு செய்ததால் அவருக்குச் சிகிச்சை அளிக்கும் எங்கள் பணி எளிதானது’ என்றார்.