tamilnadu

பெண்கள் கைது: வைகோ கண்டனம்

சென்னை,டிச.29- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மத்திய அரசுக்கு எதிராக பொங்கி எழும் கோபாவேச அலைகளை காவல்துறை மூலம் அடக்கு முறையை ஏவி ஒடுக்கிவிடலாம் என்று எடப்பாடி அரசு கருதுகிறது. ஜனநாயகத்தில் மக்கள் எழுச்சியை ஆட்சியாளர்கள் அவ்வளவு எளிதில் நசுக்கி விட முடியாது என்பதை வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும். குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துக் தங்கள் வீட்டு வாசலில் கோலமிட்ட பெண்களை எடப்பாடி அரசின் ஏவல்துறை கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.