12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்பப்பெறுவதாக மே தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளன்று 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக அதிகரித்து தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கூட்டணிக்கட்ட்சிகள் மற்றும் தொழிற்ச்சங்கங்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி இந்த சட்ட மசோதா நிருத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உலகத்தொழிலாளர்கள் தினமான இன்று மே தின விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளார்.