tamilnadu

img

சிஐடியு நிர்வாகி மீதான பழிவாங்கல் நடவடிக்கையை திரும்பப் பெறுக போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்

சென்னை,டிச.18- போக்குவரத்து துறை யில் நடைபெறும் ஊழலை எதிர்த்து நியாயம் கேட்ட தற்காக இடமாற்றம் செய்யப்பட்ட அரசு போக்கு வரத்து சங்கத்தின் (சிஐடியு ) மாநில துணைத் தலைவர் ஆர்.அருண் மீதான பழி வாங்கல் நடவடிக்கையை கண்டித்து அரசு விரைவு  போக்குவரத்து ஊழியர் சங்கம் சென்னை மாவட்டம் சார்பில் பல்லவன் இல்லம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த தர்ணா பேராட்ட த்திற்கு மாநிலத் தலை வர் ஜி.செந்தில் தலைமை தாங்கினார். போராட்டத்தை சம்மேளன துணைத் தலை வர் எம்.சந்திரன் துவக்கி வைத்தார். சம்மேளன பொதுச் செயலாளர் ஆறு முகநயினார், எஸ்சிடிசி பொதுச் செயலாளர் கன கராஜ், துணைத் தலை வர்கள் ரைமண்ட், நடரா ஜன், பொருளாளர் ரவி, நிர்வாகிகள்  சுதர்சிங், குமார், முருகேசன் உட்பட பலர் பேசினர். தொழில்நுட்ப பிரிவில் பணியாளர்கள் எடுக்காமல் டெபுடேசன் என்ற பெயரில் பணியிடமாற்றத்தை திணிப்பது திரும்பப்பெற வேண்டும், வாரவிடுப்பை மறுத்து ஆப்செண்ட் போடு வது, சட்டத்தை மீறி சேதாரத்தொகை பிடிப்பதை நிறுத்த வேண்டும், ரன்னிங், டெக்னிக்கல், அலுவலகம் உள்ளிட்ட 3000 காலி யிடங்களை உடனே நிரப்ப வேண்டும், ஊழியர் பற்றாக்குறையை காரணம் காட்டி தொடர்ந்து பணி செய்ய நிர்பந்திக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரி க்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.