சென்னை:
மத்திய அரசு 8 ஆம் தேதியிலிருந்து வழிபாட்டு தலங்களை திறக்க அனுதி அளித்த போதிலும், இன்னும் முடிவு செய்யவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.திங்கள் முதல் (ஜூன் 8) வழிபாட்டு தலங் களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் ஒவ்வொரு மாநிலங்களும் வழிபாட்டு தலங்களை திறக்க ஏற்பாடு செய்து வருகின்றன.கேரளாவில் சபரிமலை திறக்கப்படும் என்றும், ஆந்திராவில் திருப்பதி கோவில் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து தலைமை செயலாளர் மதத்தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் கோவில்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் தமிழகத்தில் வழிபாட்டு தலங் களை திறப்பது குறித்து முடிவு செய்யவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.நோய் தொற்று குறையாத காரணத்தால் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.