விழுப்புரம், ஏப்.23-மத்திய அரசின் அர்ச்சுனா விருது, தயான்சந்த் விருது, ராஜீவ்காந்தி கேல்ரத்னா துரோணாச்சாரியா விருது மற்றும் ராஷ்டிரியா கேல் புரட்ஷான் புரஷ்கார் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.அர்ச்சுனா விருது 2019 விளையாட்டில் பன்னாட்டு அளவில், கடந்த நான்கு ஆண்டுகளாக சிறந்த சாதனை படைத்ததை தொடர்ந்து, விளையாட்டிற்கு தலைமை பொறுப்பேற்று வழிநடத்தும், விளையாட்டு வீரர்களுக்கானது. தயான்சந்த் விருது விளையாட்டு வளர்ச்சிக்கான ஆர்வலர்களுக்காகவும், ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது அங்கீகரிக்கப்பட்ட பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் சிறந்த சாதனை படைத்தவர்களுக்கும் வழங்கப் படுகிறது.துரோணாச்சாரியா விருது முந்தைய 4 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க, விளையாட்டு சாதனையாளர்களை உருவாக்கிய விளையாட்டு பயிற்சிக்கும், ராஷ்டிரியா கேல் புரட்ஷான் புரஷ்கார் விருது அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனத்திற்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசின் இந்தாண்டிற்கான காந்தி அமைதி பரிசு விருது அமைதி வழியில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்திய தலைசிறந்த தனிநபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கும், மத்திய அரசின் இந்தாண் டிற்கான அசோக் சக்ராவின் கேலன்டரி விருது வீரதீரச் செயல் புரிந்தமைக்கும் வழங்கப்படுகிறது.இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங் கள் வரும் 25 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இல். சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.