கிராமங்களில் களப்பணியாற்றும் செவிலியர்களுக்கு என்.95 முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் செவிலியர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூலை 21) தமிழகம் முழுவதும் கிராம சுகாதார செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர். தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் அறைகூவலை ஏற்று இந்தப் போராட்டம் நடைபெற்றது.