சென்னை:
சென்னையில் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தில் கல்லூரி மாணவர் பலியானார். வீடியோ கேம் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் சுடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வண்டலூரை அடுத்த வேங்கடமங் கலத்தைச் சேர்ந்தவர் முகேஷ் குமார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவந்தார். செவ்வா யன்று இவரது பெற்றோர் வேலை விஷய மாக வெளியில் சென்று விட்டனர். தனது நண்பர்கள் உதயா மற்றும் விஜய் ஆகியோருடன் முகேஷ் குமார் வீட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. அதிர்ச்சிஅடைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது, நெற்றியில் குண்டு பாய்ந்த நிலையில் முகேஷ் குமார் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.முகேஷ் குமாரை அவர்கள் ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முகேஷ் குமார் உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து தாழம்பூர் போலீசார், முகேஷ் குமாரின் நண்பர் உதயாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாகியுள்ள விஜய் என்பவரை தேடி வருகின்றனர்.வீடியோ கேம் விளையாடுவது தொடர்பான மோதலில் முகேஷ் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.