தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் படி,
தமிழ்நாடு துணை முதலமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகிறார்.
புதிய அமைச்சர்கள்!
கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன், சா.மு.நாசர், செந்தில் பாலாஜி ஆகியோருக்கு தமிழ்நாடு அமைச்சரவையில் இடம். அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கா.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிப்பு.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில், 6 அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
புதிய அமைச்சர்கள் நாளை மாலை 3.30 மணிக்கு, ஆளுநர் மாளிகையில் பதவியேற்க இருக்கின்றனர்.
5 அமைச்சர்களின் துறைகள் மாற்றம்!
சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த வி.மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம்.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த என்.கயல்விழி செல்வராஜ், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக மாற்றம்.
வனத்துறை அமைச்சர் அமைச்சராக இருந்த எம்.மதிவேந்தன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக மாற்றம்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பால்வளத்துறை அமைச்சராக மாற்றம்.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூடுதலாக வகித்து வந்த மின்சாரத் துறைக்கு பதிலாக சுற்றுச்சூழல் துறை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தலைமை கொறடாவாக கா.ராமச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.