சென்னை:
புதிய வகை கொரோனா தொற்று தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவினருடன் டிசம்பர் 28ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.கோவிட்-19 பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து மாதம்தோறும் ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி, அதன்படி ஊரடங்கு தளர்வை அறிவித்து வருகிறார்.இந்நிலையில், இங்கிலாந்திலிருந்து பரவும் புதிய வகை கொரோனா தொற்று குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவினருடன் டிசம்பர் 28ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
அப்போது, எந்தெந்த மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்துள்ளது, அடுத்து என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. ஆங்கில புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை விரைவில் வரயிருப்பதால், அப்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் மருத்துவ நிபுணர்களிடன் கருத்துக்களை முதலமைச்சர் கேட்டறியவுள்ளார்.மேலும், தற்போது வரை பள்ளி, கல்லூரிகள், திறக்கப்படாமல் உள்ளதால், அடுத் தாண்டு ஜனவரி மாதம் முதல் பள்ளி, கல்லூரிகளை திறப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.