அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், 4 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவ்வழக்கில் ஞானசேகரன் (37) என்பவர் கைது போலீசார் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு விசாரணை செய்ய உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, காவல் துணை ஆணையர்கள் சிநேக ப்ரியா, ஜமான் ஜமால், பிருந்தா ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.