தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை (அக்.14) முதல் அக்.17-ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதுதொடர்பாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, நாளை (அக்.14) முதல் அக்.17-ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
கூட்டத்தின் முதல் நாளில், மறைந்த முன்னாள் 8 எம்.எல்.ஏக்கள், கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபுசோரன், நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, ஐஏஎஸ் அதிகாரி மருத்துவர் பீலா வெங்கடேசன் ஆகியோருக்கு இரங்கல் மற்றும் கரூர் துயரத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.