tamilnadu

img

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏப்ரல் 30 வரை நடைபெறுகிறது!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான  பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.  இதை தொடர்ந்து, சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதன் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்தார்.

நாளை சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மார்ச் 17-ஆம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. மார்ச் 21-ஆம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும். பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.