tamilnadu

img

கணினிக்கதிர் : இந்த மாத அறிமுகங்களும் அப்டேட்களும் பேஸ்புக் மெஸஞ்சர்

பேஸ்புக் மெஸஞ்சர் செயலியில் புதிய மாற்றங்கள் வந்துள்ளன. நைட்மோட் என்ற வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இரவு நேரத்திற்கேற்ப வெளிச்சத்தில் மாற்றம் ஏற்படும்வகையிலும், தகவல்களை அனுப்பும் போது நாம் பயன்படுத்தும் எமோஜிப் படங்கள் நிலவுடன் கூடியதாகஇருக்கும்படியாக சில வடிவமைப்புப் புதுமைகளும் செய்யப்பட்டுள்ளன.உரையாடல் பதிவுகளை பாதுகாக்க சில வழிகளைச் செய்து பாதுகாப்பை அதிகரித்துள்ளது. பேஸ்புக் மெஸஞ்சரில் பதிவு செய்யப்படும் உரையாடல்களின் பாதுகாப்புக்கு ‘சீக்ரெட் உரையாடல்’ என்ற பெயரில் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. இது முழுமையான பாதுகாப்பை வழங்கும்என்று கூறப்படுகிறது. இத்துடன் மால்வேர் மற்றும்ஹேக்கர் தாக்குதலை சமாளிக்க வேறு கணினி அல்லது மொபைலில் உங்கள் அக்கவுண்ட் மூலம் நுழையும்போது எச்சரிக்கை தகவல் அனுப்பும் வகையில் ‘லாகின் அலர்ட்’ என்ற புதிய வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வசதியை கூகுள் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே வழங்கி வருகின்றன. போலிக் கணக்குகளைக் கண்டறிந்து நீக்கிவிடும் வகையில் புதிய வசதிகள் மேம்படுத்தப்பட் டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் போலியான கணக்குகளிலிருந்து தகவல்களைத் திருடும் நோக்கத்துடன் அனுப்பப்படும் இமேஜ்கள் மற்றும்இணைய முகவரி இணைப்புகளிலிருந்து தப்பிக்கவழிவகை செய்யப்பட்டுள்ளது. வதந்திகள் பரப்பப்படுவதைத் தடுக்கவும் சில வழிகள் செய்யப்பட்டுள்ளன. 

பேஸ்புக் புதிய லோகோ
பேஸ்புக் நிறுவனம் 15 ஆண்டுகளுக்குப் பிறகுதற்போது தனது பெயரின் வடிவமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதற்குமுன் வடிவத்தில் சிறு அளவில் மட்டுமே ஒரு சில மாற்றங்களை செய்திருந்தாலும் அடிப்படை வடிவத்தைமாற்றி தற்போது முற்றிலும் புதிய லோகோவைஅறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த இலச்சிணை முன்பு போல நீல வண்ணத்தில் இல்லாமல் சேவைகளுக்கு ஏற்ப வெவ்வேறு வண்ணங்களில் காட்சியளிக்கும் என்று தெரிகிறது. பேஸ்புக்கின் பிற சேவைகளான பேஸ்புக் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஆகுலஸ், வொர்க்பிளேஸ், போர்டல் மற்றும் கலிப்ரா போன்றவற்றிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. தன்னுடைய பிற சேவைகளில் ஃபேஸ்புக்கிலிருந்து என்பதைக் குறிப்பிடும் வகையில் from Facebook என்ற வாசகத்தை கடந்த ஜூன் முதல் சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப்பில் கைரேகை பூட்டு
வாட்ஸ்அப் செயலியில் உள்நுழைய 6 இலக்கபாஸ்வேர்ட் அமைக்கும் முறை பயன்பாட்டில் உள்ளது. கைரேகை மற்றும் முக அடையாளத்தைக் கொண்டு திறக்கும் வகையிலான புதிய வசதிஐபோன் சாதனங்களில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகமானது. தற்போது ஆண்ட்ராய்டுபதிப்பிற்கும் கைரேகை வசதி அறிமுகமாகியுள்ளது.வாட்ஸ்அப் பயன்படுத்துபவரைத் தவிர்த்து மற்றவர்கள் பார்க்காமல் தடுக்கும் வகையில் இந்த வசதிகூடுதல் பாதுகாப்பைத் தரும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.இந்த வசதியை பயன்படுத்த உங்கள் போனில்கைரேகை சென்சார் அம்சம் இருக்கவேண்டும். கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் இந்த வசதியைப் பயன் படுத்த விரும்பினால் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் கிளிக்செய்து அக்கவுண்ட் தொடர்பான பிரிவில் பிரைவசி ஆப்ஷன்களை க்ளிக் செய்யவும். அதில் கைரேகை லாக் எனும் வசதி காட்டப்படும். Unlock with fingerprint என்பதை இயக்கவும். வாட்ஸ்அப் மூன்று வகை பாதுகாப்பு தேர்வுகளை வழங்குகிறது. தானாக லாக் ஆகும் முறையில்உடனடியாக அல்லது ஒரு நிமிடத்திற்கு பின் அல்லதுமுப்பது நிமிடங்களுக்கு பின் எது உங்கள் தேவைக்குஉகந்ததோ அதை தேர்வு செய்து லாக் செய்யலாம்.கைரேகை லாக் ஆன் செய்யப்பட்ட பிறகு, வாட்ஸ்அப் மூலம் வரும் அழைப்புகளை பேசுவதிலோ நோட்டிபிகேஷன்களாகத் திரையில் தோன்றும் தகவல்களுக்கு பதிலளிப்பதையோ எப்போதும் போல் செய்யலாம். வாட்ஸ்அப் செயலியை திறக்கும்போது மட்டுமே கைரேகை வசதி கேட்கப்படும். நோட்டிபிகேஷன் செய்திகள் தெரிய வேண்டாம் என நினைத்தால் செட்டிங்ஸ் நுழைந்து நோட்டிபிகேஷன் என்பதில் Show content in notifications என்பதில் சென்று மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

வாட்ஸ்அப் பிஸினஸ்-ல் கேட்லாக் வசதி
வர்த்தகர்களுக்கு உதவும் வகையில் வெளியிடப்பட்ட ‘வாட்ஸ் அப் பிஸினஸ்’ செயலியில், ‘கேட்லாக்ஸ்’ (‘Catalogs’) என்ற புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. வர்த்தக நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த ஒவ்வொரு படமாக
வெளியிட வேண்டியிருந்தது. இதற்கு பதிலாகஒரு தொகுப்பாக பார்க்கும் வண்ணம் இந்த வசதிமேம்படுத்தப்பட்டுள்ளது. கேட்லாக்ஸ் வசதி மூலம்மக்கள் தங்களுக்குத் தேவையானதைக் கண்டறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரே செயலியில் மைக்ரோசாப்ட் ஆபீஸ்
மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் புதியஆபீஸ் செயலியை வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்ட்டின் மூன்று பிரபல மென்பொருள்களான வேர்டு, எக்செல் மற்றும் பவர்பாயிண்ட் ஆகியமூன்றையும் ஒருங்கிணைத்து ஒரே செயலியாக இது வழங்கப்பட்டுள்ளது. இச்செயலி ஆப்பிள்ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியில் விரைவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள எட்ஜ் பிரவுசரும் சேர்க்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்ஸ்டாகிராம் தரும் புதிய வசதி
பேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் தனதுபயனாளர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க சில வசதிகளைக் கொண்டுவந்துள்ளது. மூன்றாம் தரப்பு சேவை வழங்குபவராக இணைந்து பயனரின் விபரங்கள் களவாடப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது. இப்புதிய வசதி மூலம் மூன்றாம் தரப்பினர் பயனரின் எந்தெந்த விபரங்களைப் பார்க்க முடியும்என்பதை பயனரே தீர்மானிக்க முடியும். இதற்கேற்பஅனுமதி வழங்கும் பக்கத்தில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இதில் அனுமதி வழங்கவும், நிராகரிக்கவும் கூடிய வசதிகள் அந்தப் பக்கத்திலேயே பயனரின் பார்வைக்கு காட்டப்படும் வகையில் இருக்கும் என்று இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

===என்.ராஜேந்திரன்====