tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

தேர்வு மையத்தில் திருவண்ணாமலை ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு திருவண்ணாமலை

, மார்ச்18- திருவண்ணாமலை அடுத்த அடியண்ணாமலை அரசினர் உயர்நிலைப் பள்ளி மற்றும் தேவனந்தல் ஊராட்சி வேடியப்பனூர் அரசு பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் வகுப்பறைக்கு சென்று,  மாவட்ட ஆட்சியர்  தர்ப்பகராஜ்  அவர்களோடு கலந்துரை யாடினார். மேலும் ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து வழங்கப்பட்ட  வினா விடை தொகுப்பு சிறப்பு கையேடு பயனுள்ளதாக இருக்கிறதா என கேட்டறிந்தார். பொதுத் தேர்வில் வெற்றிபெறவேண்டும் என வாழ்த்து தெரி வித்தார்.

 40 ஆண்டுகளாக குடியிருக்கும்  இடத்திற்கு பட்டா  கேட்டு மனு  விழுப்புரம்

, மார்ச்18- திருவக்கரை ஊராட்சியில் 40 ஆண்டுகளாக குடியிரு ப்போர் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா கேட்டு கோரிக்கை மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருவக்கரை ஊராட்சி பகுதியில் அண்ணா நகர் என்ற இடத்தில் கடந்த  40 ஆண்டுகளாக குடியிருக்கும் திருவக்கரையில் கல் உடைக்கும் தொழிலில் 18 தொழிலாளர் குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  தாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு இதுவரை பட்டா  வழங்கவில்லை எனவும் உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர் விஸ்வநாதன் தலை மையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

தியாகிகள் குறைதீர் நாள் கூட்டம் ராணிப்பேட்டை,

மார்ச் 18- சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசு தாரர்களுக்கு குறை தீர்க்கும் நாள் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று (மார்ச் 17) மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ் தலைமையில் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் 9 கோரிக்கை மனுக்கள் பெறப்பட் டது.சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு அடையாள அட்டை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் ஓய்வூதிய விதவை பெண்களுக்கு இலவச பேருந்து அடையாள அட்டை  வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.