சென்னை:
தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், சட்டமன்ற குழு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களை கலந்து பேசி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து மக்கள் நடமாட் டத்தை குறைக்க தமிழகத்தில் படிப்படியாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.ஆரம்பத்தில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை மளிகைக்கடைகள், காய்கறி கடைகளை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் காலை 10 மணிவரை மட்டுமே இந்த கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கும் இ-பாஸ், இ-பதிவு என்று பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டன.காவல்துறையினர் பொதுமக்களிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று காவல்துறை தலைவர் திரிபாதி வேண்டுகோள் விடுத்தார். எனவே ஆரம்பத்தில் காவல்துறையினர் கடும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. அறிவுரைகள் கூறி வந்தனர்.கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதிவரை ஊரடங்கு அறிவிக்கப்பட் டது. என்றாலும், இதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கும் நோயாளிகள் எண்ணிக்கை தினமும் 35 ஆயிரமாக இருந்தது. இதையடுத்து ஊரடங்கில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.காவல்துறையினரின் நடவடிக்கையும் தீவிரமானது. முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கட்டுப்பாடுகளை மீறியவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முகக் கவசம் அணியாதவர் களுக்கு மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது. விதிமுறைகளை மீறி திறந்த கடைகள் சீல் வைக்கப்பட்டன. அபராதமும் விதிக்கப்பட்டது.பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் எதிர்பார்த்த அளவு மக்கள் நடமாட்டம் குறையவில்லை. எனவே பல்வேறு ஆலோசனைக ளுக்குப் பிறகு மே 24 முதல் வருகிற 31 ஆம் தேதி வரை ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அறிவிக்கப் பட்டுள்ளது.
கடைகள் அடைப்பு...
அதன்படி தளர்வில்லா முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட் டுள்ளது. பால் விநியோகம், மருந்து கடைகள், பெட்ரோல் நிலையங்கள் தவிர அனைத்து கடைகளும் மூடப் பட்டுள்ளன.உணவகங்களில் குறிப்பிட்ட நேரம் வரை பார்சல் மட்டும் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே அவை தடையின்றி நடந்தன.
வாகனங்கள் பறிமுதல்...
தமிழகம் முழுவதும் தளர்வு இல் லாத முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் காவல்துறையினர் நடவடிக்கை கடுமையாக்கப் பட்டுள்ளது. தடைகளை மீறி வெளியே வருவோரின் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள் ளது. இந்த வாகனங்களை முழு ஊரடங்கு முடிந்த பிறகு நீதிமன்றம் மூலமே திரும்பப் பெற முடியும் என்று காவலர்கள் தெரிவித்தனர்.இந்த நிலையில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் விதிமுறைகளை கடைபிடித்து கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அத்தியாவசிய பணி தொடர்பானவர்கள் தவிர யாரும் வெளியே வரக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தேவையின்றி சுற்றும் சிறுவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய் யப்படும் என்றும் தடையை மீறி கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டால் அந்த கடைக்கு சீல் வைக் கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.அரசு மற்றும் காவல் துறையினரின் உத்தரவுகளை பெரும்பாலானோர் கடைபிடித்தாலும் ஒரு சிலர் தொடர்ந்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த நிலைமை சென்னை மாநகரம் மட்டுமல்ல அருகாமை மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த ஒரு காவல்துறையினர் முறையாக கண்காணிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
மேலும் ஒரு சில பகுதிகளில் இறைச்சி, மளிகை, காய்கறி கடைகளை ரகசியமாக திறந்து வியாபாரம் செய்வதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை அதிகாரிகளும் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி அதிகாரிகள் இதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.