tamilnadu

img

பெரும்பாக்கம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் பரவும் காய்ச்சல்

சென்னை, ஜூலை 13- சென்னையடுத்துள்ள பெரும் பாக்கம் குடிசை மாற்று வாரிய குடி யிருப்பு மக்களுக்கு காய்ச்சல் பரவி  வருகிறது. இதனை தடுக்க தமிழக  அரசு உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் வலியுறுத்தி உள்ளனர். பெரும்பாக்கத்தில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதி உள்ளது. இங்குள்ள சுமார் 165  பிளாக்குகளில் 18 ஆயிரம் வீடுகள்  உள்ளன. சென்னை நகரில் நீர் வழிக்கரையோரம், ஆக்கிரமிப்பு நிலங்களில் அகற்றப்படும் மக்களை  இந்த குடியிருப்பில் குடியமர்த்து கிறது. இந்த குடியிருப்பு பகுதிக் கென்று ஒரு ஆரம்ப சுகாதார நிலை யம் உள்ளது. குடியிருப்புகளை சுற்றியுள்ள திறந்தவெளி பகுதியிலும், மூடி  இல்லாத மழைநீர் காலவாய்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கழிவுநீர்  கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு  அதிலிருந்து நீர் கசிந்து வெளியேறு கிறது. இவற்றிலிருந்து உருவாகும் கொசுக்கள் குடியிருப்போரை பதம்பார்த்து விடுகின்றன. இந்தப் பகுதியில் சில மாதங்க ளுக்கு முன்பு 137வது பிளாக் பகுதி யில் உள்ளவர்களுக்கு காய்ச்சல்  ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து  138வது பிளாக்கில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டனர். நீண்ட நாள் சிகிச்  சைக்கு பிறகே காய்ச்சல் சரியானா லும் பாதிக்கப்பட்டவர்களுக்க கை,  கால் வீக்கம், குடைச்சல் தொடர்ந்து இருந்து வருகிறது. தற்போது 139, 140வது பிளாக்கில்  உள்ளவர்களும் காய்ச்சல், கை, கால் வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலுக்கு உள்ளானோர் பலர் திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோர் குறிப்பிடுகையில், குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சி யாக 100 பேர் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே,  அந்த பகுதிக்கு அரசு மருத்துவக்குழு  அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும். அவ்வப்போது மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.  குடியிருப்பு பகுதியில் உள்ள சுகாதார நிலையத்தில் போதுமான மருத்துவர்கள் இல்லை. எனவே, சிகிச்சை பெற சென்னைக்கு வர வேண்டி உள்ளது. குடியிருப்பு பகுதி யில் அடிக்கடி கொசு மருந்து அடிப்  பது, பிளிச்சிங் பவுடர் போடுவது கழிவு நீர், மழைநீர் கால்வாய்களை மூடி வைத்து பராமரிப்பது போன்ற பணிகளை குடிசைமாற்று வாரியம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.