tamilnadu

img

‘கீழடி’ அகழ்வாராய்ச்சி நூல் வெளியீடு

சென்னை,செப்.19- கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த ‘கீழடி’ என்ற நூலை தமிழக பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டிய ராஜன் சென்னையில் வெளியிட்டார். வைகை நதி தென்கரையில் மதுரை யிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத் தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்து ள்ளது கீழடி கிராமம்.  தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அக ழாய்வு ஆகும். கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள் ளன. சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. தற்போது, கீழடி கிராமம் அகழ்வா ராய்ச்சி குறித்து வரும் ’கீழடி’ என்ற  நூலை அமைச்சர் மாஃபா பாண்டிய ராஜன் சென்னையில் வெளியிட்டுள்ளார்.