tamilnadu

அகஸ்தியா தியேட்டர் நிரந்தரமாக மூடப்படுகிறது

சென்னை, ஆக. 31- கொரோனா ஊராடங்கால் ஏற்பட்ட  இழப்பு காரணமாக தண்டையார்பேட்டையில் இருக்கும் பழமையான அகஸ்தியா தியேட்டர் செவ்வாய்கிழமை (செப்.1) முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது. அகஸ்தியா தியேட்டர் 1967ம் ஆண்டு 1004 இருக்கைகளு டன் திறக்கப்பட்டது. முதல் படமாக ‘பாமா விஜயம்’ திரை யிடப்பட்டது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல ஹாசன், விஜய், அஜித்குமார், சூரியா உள்ளிட்டோர் நடத்த பல வெற்றி படங்கள் அகஸ்தியாவில் திரை யிடப்பட்டு உள்ளன. வடசென்னை மக்களின் பொழுது போக்கோடு இரண்டற கலந்துவிட்ட அகஸ்தியா தியேட்டர் மூடப்படுவது அந்த பகுதி மக்களுக்கு வருத்தத்தை ஏற்ப டுத்தி உள்ளது. 3 மாதங்களுக்கு முன்பு கொருக்குபேட்டை பகுதியில்  உள்ள மகாராணி, வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ராஜேஸ்வரி தியேட்டர்கள் மூடப்படுவதாக அறி விக்கப்பட்டன. சென்னையில் ஏற்கனவே சாந்தி, வசந்தி, நடராஜ், காமதேனும், பைலட், ஆனந்த், பாரகன், ராக்சி, ராஜ குமாரி, நாகேஷ், ஸ்டார் உள்பட 50க்கும் மேற்பட்ட தியேட்டர்  களை மூடி வணிக வளாகங்கள் கட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.