tamilnadu

img

தமிழ்நாடு இறகுப்பந்து கழகம் நடத்தும் சூப்பர் லீக் தொடர் துவக்கம்

தமிழ்நாடு இறகுப்பந்து கழகம் நடத்தும் தமிழ்நாடு இறகுப்பந்து சூப்பர் லீக்(Tamilnadu Badminton Super League (TNBSL-2019)) விளையாட்டுப் போட்டி இன்று துவங்கப்பட்டுள்ளது.


சென்னையின் முகப்பேர் பகுதியில் உள்ள ஃபையர்பால் பேட்மிட்டன் அகாடமியின் ஆடுகளத்தில் வருகின்ற ஜூன் மாதம் 3ம் தேதி துவங்கி ஜூன் 9ம் தேதி முடிவடையவுள்ளன. தமிழ்நாடு முழுவதுமுள்ள முன்னணி இறகுப்பந்து வீரர்கள் அவரவர் பயிற்சி பெறும் அகாடமியின் சார்பில் இந்த சூப்பர் லீக் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர். விளையாட்டு வீரர்கள் தேர்வு ஏலத்தின் மூலம் நடைபெற்றுள்ளதாக தமிழ்நாடு இறகுப்பந்து கழகம் தெரிவித்துள்ளது. இந்த சூப்பர் லீக் போட்டிகளில் மொத்தம் 8 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 88 வீரர்கள் 5 பிரிவுகளில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.