தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் மட்டி வாழைப்பழம், வீரமாங்குடி செடி புட்டா சேலை, திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரி நாமக்கட்டி ஆகிய 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
ஒன்றிய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மேலும் மூன்று பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மட்டி வாழைப்பழம், வீரமாங்குடி செடி புட்டா சேலை, திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரி நாமக்கட்டி ஆகிய 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை 58 பெருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.