tamilnadu

தமிழகத்தை பசுமை மாநிலமாக மாற்றுவோம்: வேளாண் அமைச்சர்....

சென்னை:
கொரோனா காலத்தில் பொது மக்கள் நலன் கருதி 48 ஆயிரம் வாகனங்களில் காய்கறிகளை விற்பனை செய்ததாக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

வேளாண் துறை நிதி நிலை அறிக்கைகள் மீது நடந்த விவாதங்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசுகையில்,“ வேளாண் நிதிநிலை அறிக்கையை உருவாக்கும் முன்பு 18 மாவட்ட மக்களிடம் கருத்துகளை கேட்டோம். வாழை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் வாழைப் பழங்களை ஏற்றுமதி செய்வது பற்றிய திட்டங்களையும் உருவாக்கி உள்ளோம். இதன் மூலம் இளைஞர்கள், தொழில் முனைவோர்களாக மாறுவார்கள்” என்றார்.

மரவள்ளிக்கு நிவாரணம்
பத்து மாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மாவு பூச்சியால் பாதித்த விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க ஹெக்டேர் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர்,“வெள்ளை பூச்சியின் தாக்கத்தால் தென்னை விவசாயமும் கடந்த ஐந்தாண்டு காலமாக பாதித் துள்ளது” என்றார்.இதற்கு பதில் அளித்த அமைச்சர்,“ வெள்ளை பூச்சியை ஒழிப்பதற்காக வேளாண் பல் கலைக் கழகம் சார்பில் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. துறை அதிகாரிகளும் ஆய்வு நடத்தி வருகிறார்கள். விரைவில் தீர்வுகாணப்படும் என்றும் தென்னை விவசாயத்திற்கும் நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறினார்.

புதிய வேளாண் திட்டங்களால் 5 லட்சம் இளைஞர்கள் பயன் பெறுவார்கள். 5 ஆண்டுகளில் தமிழகத்தை பசுமை நிறைந்த மாநிலமாக மாற்றி காட்டுவோம். குமரி மாவட்டத்தில் மட்டி வாழைக்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், தரிசு நில மேம்பாட்டுக் கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது என்றும் அவர் கூறினார்.தமிழக அரசின் இந்த திட்டத்தை பொது மக்கள் பலர் இப்போதும் செயல்படுத்தி வருகிறார்கள். சிறிய வாகனத்தில் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு கணவன்- மனைவி இருவரும் சென்று வியாபாரம் செய்வதை பார்க்க முடிகிறது. இந்த விற்பனையை ஊக்கப்படுத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.