india

img

விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த வேளாண் அமைச்சர் அதிகாரத்திற்கு வந்த பிறகு அதனை மறந்துவிட்டார்.....

புதுதில்லி;
விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் தோமர் அதிகாரத்திற்கு வந்த பிறகு எங்கிருந்து வந்தோம் என்பதை மறந்துவிட்டார் என்று தில்லியில் நடைபெற்ற விவசாயிகள் நாடாளுமன்றத்தில் விவசாயிகள் சாடினர்.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதாயம் கிடைக்கும் வகையிலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக்கோரி தில்லி மாநில எல்லைகளில்பல்வேறு மாநில விவசாயிகள் பல மாதங் களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் மோடி அரசுஇதனைக் கண்டுகொள்ளாமல், கார்ப்பரேட்பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக உள் ளது. விவசாயிகளின் போராட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள், மாணவர்கள், வாலிபர்கள்,பொதுமக்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தில்லி நாடாளுமன்ற வீதியில் “ விவசாயிகள் நாடாளுமன்றம்” என்ற வடிவத்தில் போராட் டத்தை நடத்தினர். 

தில்லியின் நாடாளுமன்ற வீதியில்வெள்ளியன்று நடைபெற்ற விவசாயிகளின் நாடாளுமன்றத்தில் பாரதிய கிசான்யூனியன்(கடியன்) சங்கத்தைச் சேர்ந்தரண்வீர் சிங் பிரார், ‘ஒன்றிய வேளாண்அமைச்சராக’ விவசாயிகள் நாடாளுமன்றத்தில் தன்னைக் காட்டிக்கொண்டார். அவரால் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை.பின்னர் பிரார் கூறுகையில், “நான் ஒருநாள் மட்டும் அமைச்சராக்கப்பட்டேன். விவசாயிகள் எழுப்பிய கேள்விகள் எதற்கும் என்னால் பதில் அளிக்க முடியாததால் நான்ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. விவசாயிகளின் கண்களை என்னால் சந்திக்க முடியவில்லை. விவசாயிகள் எழுப்பும் கோரிக்கைகள் நியாயமானவை. எனவேதான் அதனை எதிர்கொள்ள முடியாமல் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. உண்மையிலேயே வேளாண் அமைச்சராக இருந்திடும் தோமர் அவர்களும் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால் அதிகாரத்திற்கு வந்தபின் தாங்கள்எங்கிருந்து வந்தோம் என்பதை மறந்துவிடுகிறார்கள் என்று தெரிவித்தார். வெள்ளியன்று நடைபெற்ற விவசாயிகள் நாடாளுமன்றத்தில் 52 உறுப்பினர்கள் உரையாற்றினர்.