இறுதி கட்ட பணியில் தி.நகர் உஸ்மான் சாலை மேம்பாலம்
பெருநகர சென்னை மாநகராட்சிக்குள் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.246 கோடி செலவில் 13 புதிய பாலங்கள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் 676 கோடி ரூபாய் மதிப்ப்பீட்டில் புதிதாக 17 பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக தி.நகரில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சிஐடி நகர் பிரதான சாலையில் ரூ.165 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் ஒன்றை இரும்பு தூண்கள் மீது 1200 மீட்டர் நீளம், 8.40 மீட்டர் அகலத்தில் இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. பாலம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.