சென்னை:
சென்னையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வைத்த பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீயின் இறப்புக்கு ஒரு கோடிரூபாய் நஷ்ட ஈடு கேட்டும் சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்றுவலியுறுத்தியும் அவரது தந்தை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.சென்னை பள்ளிக்கரணையில் கடந்த மாதம் 12 ஆம் தேதியன்று அதிமுக முன்னாள்கவுன்சிலர் வைத்த பேனர் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீதுவிழுந்தது. இதில் நிலைதடுமாறிய சுபஸ்ரீ மீதுபின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது இந்நிலையில் சுபஸ்ரீயின் தந்தை ரவி, சுபஸ்ரீஉயிரிழந்த சம்பவத்தில் தமிழக அரசு தங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் புதனன்று மனு தாக்கல் செய்து ள்ளார். சுபஸ்ரீயின் இறப்பை விசாரிக்க சிறப்புவிசாரணைக்குழு அமைக்க வேண்டும். பேனர் வைப்பதை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.